மேல் மாகாணத்தில் நாளை முதல் தரம் 11 மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் நடைபெறத் திட்டமிட்டுள்ள பின்னணியில் மாணவர்கள் அனைவரும் ஆகக் குறைந்தளவு காலமேனும் பாடசாலைகளில் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மேல் மாகாணத்தில் 11 கல்வி வலயங்களிலுள்ள 1576 பாடசாலைகளில் 907 பாடாசலைகளில் நாளை தரம் 11க்கான மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தூர பிரதேச மாணவர்கள் தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கல்வியைத் தொடர முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களின் போக்குவரத்துக்காக சிசு செரிய சேவை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதே நேரம், க.பொ.த சாதாரண தரத்திற்கு கற்கும் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அழைக்கப்படுதல் போதுமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைய சுகாதார நிலமைகளைக் கருத்திற் கொண்டு மிகக் குறைந்த ஊழியர்களை மாத்திரமே பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தனியார் வகுப்புக்களை நிபந்தனைகளுடன் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.