ஹட்டன் பிரதேச பாடசாலையில் கல்விபயிலும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக அருகிலுள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த மாணவனின் வகுப்பைச் சேர்ந்த 37 மாணவர்களும் ஆசிரியர்கள் 14 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மாணவனின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.