சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஆகக் குறைந்த தகைமை மாற்றப்பட்டுள்ளமை தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி, ஆகக் குறைந்த தகைமையாக 2021 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த உயர் தரப் பரீட்சையில் இரண்டு C சித்திகளும், ஒரு S சித்தியும் தேவையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று சித்திகளே S ஆகக் குறைந்த தேவையாக காணப்பட்டது.
அத்தோடு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சட்டம் தொடர்பான பட்டம் பெற்றவர்கள், விசேட தெரிவுப் பரீட்சைக்குப் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் புதிய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு முதல் சட்டக் கல்லூரியின் இறுதி வருட பரீட்சைகள் அனைத்தும் ஆங்கில மொழியில் மாத்திரமே நடாத்தப்படும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.