இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்திற்கு தோற்றவுள்ள மேல் மாகாணத்தின் மாணவர்களுக்காக 907 பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 25 முதல் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து மேல் மாகாணத்தில் பிற தரங்களுக்கான பாடசாலைகளை திறப்பது குறித்து முடிவெடுக்க இந்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது..
சுகாதார சேவைகள் பணிப்பாளர், பரிந்துரையைப் பெற்ற பின்னர், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் சுகாதார பரிந்துரைகள் பெறப்படும் பட்சத்தில் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக செயலாளர் தெரிவித்தார்.