தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வி அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபலமான பாடசாலைகளை வகைப்படுத்தவும், வெட்டுப்புள்ளிகளைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படும் முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“நீண்ட காலமாக, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்க எந்த அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எந்த விளக்கமும் எந்த சூத்திரமும் இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் கல்வி அதிகாரிகள் இது குறித்து விளக்கம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.