2019 ஆம் ஆண்டில் 30783 மாணவர்கள் அவர்களுக்கான பாடசாலைக் காலத்தில் பாடசாலை செல்ல வில்லை என தெரிய வந்துள்ளது.
தரம் 1 தொடக்ம் தரம் 11 வரையான மாணவர்கள் இவ்வாறு பாடசாலை வராது இடைவிலகியுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மூன்று லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து எழுபத்து ஏழு பேர் அனுமதி பெற்றுள்ளனர். அதில் நூற்றி எழுபது (170) மாணவர்கள் இரண்டாம் தவணைக்கு செல்லவில்லை.
தரம் 2 மாணவர்களில் 273 பாடசாலையை விட்டு விலகியுள்ளனர்.
தரம் நான்கில் 138 பேரும் தரம் 5 இல் 2415 பேரும் பாடசாலைகளை விட்டு விலகியுள்ளனர்.
தரம் 6 இல் இருந்து 7க்கு வரும் மாணவர்களில் 3040 பாடசாலைகளை விட்டு விலகியுள்ளனர்.
தரம் 7 இல் இருந்து 8க்கு வரும் மாணவர்களில் 3785 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர்.
தரம் 8 இல் இருந்து தரம் 9 க்கு செல்லும் மாணவர்களில் 127 மாணவர்களும்
தரம் 9 இல் இருந்து தரம் 10 க்கு செல்லும் மாணவர்களில் 7524 மாணவர்களும் இடைவிலகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 524 பேர் பாடசாலை செல்லாத மாணவர்கள் உள்ளதாக கணக்காளர் நாயகம் கண்டறிந்துள்ளார்.
இதற்கேற்ப கொழும்பு பிரதேச செயலக பிரிவின் கிராம சேவை பிரிவுகள் 35 இல் பாடசாலைகள் செல்லாத பிள்ளைகள் 210 பேர் உள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக மாணவர்கள் பாடசாலை செல்லாதுள்ளனர்.
மொரட்டு பிரதேச செயலக பிரவின் 42 கிராம சேவை அதிகாரிகள் பிரிவுகளில் 95 மாணவர்கள் பாடசலைக செல்லாதுள்ளனர். ரத்மலானையில் 55 பேரும் கொலன்னாவ பிரதேசத்தில் 54 பேரும் பாடசாலைகளுக்கு செல்லாதுள்ளனர்.
சீதாவக்க பிரதேச செயலகத்தில் 49 மாணவர்களும் திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் 23 பேரும் கடுவல பிரதேசத்தில் 25 பேரும் பாடசாலை செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகங்களில் தெஹிவல, சிரி ஜயவர்தனபுர கோட்டை மற்றும் மகரகம ஆகிய 3 பிரதேச செயலங்களிலும் பாடசாலை செல்லாத மாணவர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.