கல்வியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்துள்ளவர்களுக்கான நியமனங்கள் மாகாண மட்டங்களில் இடம்பெறவுள்ளன.
மத்திய மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு நாளை (13.01.2021) பிற்பகல் 2.00 மணிக்கு கண்டி தர்மராஜா கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே அவர்கள் நியமனங்களை வழங்கிவைப்பார்.
சம்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெறவுள்ளவர்களுக்கான நியமனக்கடிதங்கள் 14.01.2021 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு புதிய நகரில் அமைந்துள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும்
சப்ரகமுவ மாகாண ஆளுனர் கௌரவ டிகிரி கொபேகடுவ அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை வகிப்பார்.
வடமேல் மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெறவுள்ளவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் வெள்ளிக் கிழமை (15) அல்லது திங்கட் கிழமை (18) வழங்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.