கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி முடியும் வரை புலமைப் பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ப்ரேல் முறையில் பரீட்சைக்குத் தோற்றி கூடுதலான புள்ளிகளைப் பெற்ற உதித் ஷாலுக என்ற மாணவனுக்கும் எதிர்கால கற்கைகளுக்கான புலமைப் பரிசில் வழங்குவதற்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
திறமை மிக்க மாணவர்களின் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கல்வி என்பன முடியும் வரை மாதாந்தக் கொடுப்பனவை வழங்க CL Synergy என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.
மாதாந்தம் 4500 ரூபா வழங்கப்படுவதோடு அதில் 500 ரூபா மாணவர்களின் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்