முன்பள்ளிகள் மற்றும் பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை திங்கள் முதல் திறப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி பாடாசலை கீழ்கட்டுமான வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் இவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.