கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக விமானப்படை அதிகாரிகளை பணிக்கமர்த்தப்படுவது தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டிய சம்வங்கள் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி இன்று (5) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது
கல்வித்துறையில் விமானப்படை வீரர்களை நியமிப்பது, இராணுவ வீரர்களை பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்படுவதற்கான முன்னோடி நடவடிக்கையா என ரோகிணி கவிரத்ன எப்.பி கேள்வியெழுப்பினார்
ஜனாதிபதி, இராணுவத் தளபதி மற்றும் தன்னைத் தவிர வேறு யாரும் அரச அதிகாரிகள் தமது கடமையை ஒழுங்காக செய்யவில்லை, இதனால் இராணுவ அதிகாரிகளை அமைச்சு உதவி செயலாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியதாக செய்தி வெளியாகியதாக அவர் குறிப்பட்டார்.
படைத்தரப்பை ஆசிரியர்களாக நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென குறிப்பிட்ட கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதால், இது குறித்து ஆராய நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டார்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டில் கல்வி தடைபட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் இத்தகைய நியமனங்கள் கேள்விக்குரியவை என்று எம்.பி ரோகிணி குற்றம் சாட்டினார்
விமானப்படை பணியாளர்களை நியமிப்பது ஆசிரியர் சேவையை மீறுவது, கல்வியில் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் கல்வியின் தரத்தையும் சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்