கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில், தங்கள் வசிப்பிடங்களுக்கு 2 கிலோ மீற்றர் தூரத்துக்குள் இருக்கும் எந்தவொரு பாடசாலையிலும் கல்வி கற்பதற்கான அனுமதியை வழங்கினால், சமிக்ஞைகளைத் தேடி, பாறைகள், கட்டடங்கள், மலைகள் தாங்கிகள் மீது ஏறவேண்டியதில்லை என, மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ. கமகேவால் தெரிவித்தார்.
தமது பிள்ளைகளை, யட்டிநுவர- மெனிக்டிவல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு, மாணவர்களின் பெற்றோர் தன்னிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, மெனிகிடிவல பாடசாலை அதிபரிடம் இது தொடர்பில் கலந்துரையாடி அனுமதியைப் பெற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் வெற்றியைச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய மாகாண ஆளுநர், இதை மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் செயற்படுத்த முடியும். இதனால் மாணவர்களின் மனநிலையிலும் பாதிப்பு ஏற்படாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், இவ்வித்தியாலயத்துக்கான விஜயமொன்றைத் தொடர்ந்து, குறித்த தீர்மானம் சிறப்பானது என்றும், பல்வேறு பாடசாலைகளின் மாணவர்கள் நல்லுறவைப் பேணுவதை லலித் யு. கமகே அவதானித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
tamilmirror.lk