ஆரம்ப பிரிவு மாணவர்கள் இரு குழுவாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் தினத்திலிருந்து இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளிடையே சமூக இடைவெளியைப் பேணும் வகையில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் செயற்பாடுகள் அடங்கிய விரிவான வழிகாட்டல் சில தினங்களில் வெளிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.