60 வயதுக்கு மேற்பட்டவர்களை கல்வியில் வைத்திருந்தால் வழக்கு
60 வயதை தாண்டிய அதிகாரிகளை தொடர்ந்தும் பதவிகளில் வைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த வருட இறுதியாகும் போது கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்றின் அதிகாரிகள் எண்ணிக்கை முன்னூறைக் கடப்பதாகவும் இப்போதுள்ளவர்கள் ஓய்வுபெறுவதனால் துறைக்கு எந்த பிரச்சினைகளும் ஏற்பாடாது என சங்கத்தின் பேச்சாளர் ப்ரபாத் விதானகே தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற வேண்டிய ஒரு சிலரையேனும் பதவியில் வைத்திருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருப்பது, தற்போது பதவிகள் இல்லாமல் குறித்த தரத்தில் உள்ளவர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கல்வி நிர்வாக சேவையில் முதலாம் தரத்தில் 219 அதிகாரிகள் முதல் வகுப்பு பொறுப்பின்றி உள்ள நிலையில் ஓய்வு பெற்றுச் செல்ல வேண்டியவர்களை வைத்திருக்க முயற்சிப்பது அநியாயமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு வயதை அறுபதாக குறைத்ததோடு, உயர் அதிகாரிகள் இருபதாயிரம் பேர் ஓய்வு பெறவுள்ளதோடு, அவர்களினால் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கே பெரிதும் பாதிப்பு என அரச நிர்வாக அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.