திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 6 பாடசாலை மாணவர்கள் உட்பட 21 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.