மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளின் தரம் 1-5 வரையான வகுப்புக்கள் மற்றும் முன்பள்ளிகள் எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி திங்கள் முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் பாடசாலைகளை தற்போதைய நிலையில் ஆரம்பிக்க முடியாது என்பதையும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.