பாடசாலைகளின் ஆரம்ப மற்றும் இடை நிலைக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கோடு மூன்று புதிய கல்விமாணி பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சுமார் 1500 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ள இப்பாடநெறி அடுத்த கல்வி ஆண்டில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் செயலாளர் உபாலி சேதர தெரிவித்துள்ளார்.
Bachelors of Arts in Primary, Bachelors of Arts in Junior Secondary and Bachelors of Arts in Senior Secondary என மூன்று பாடநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலில் தயாரிக்கப்ட்டுள்ள இப்பாடநெறிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை டிப்ளோமா சான்றிதழ்களோடு மாத்திரமே அதிகமான ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் கடமையாற்றுவதாகவும் ஆரம்ப கல்வியை தரமுயர்த்துவதற்கு இந்த நடடிவக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.