மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் தமக்கு 2 கிலோ மீற்றர் அண்மையில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கற்றல் – கற்பித்தல் பணிகளை ஆரம்பித்துள்ளது. கோவிட்19 தொற்றுக் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிகக்ப்படாது தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான திட்டமாக இதனை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் பிரேரித்துள்ளது.
இத்திட்டம், யடினுவர மெனிக்திவெல மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திலக் ஏக்கநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடராக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாணவர் – ஆசிரியர் நேரடி இடைத் தொடர்புகளினூடான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகயாகவும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கோவிட்19 நிலைமைகளின் கீழ் தமது பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு இவ்வேற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மாணவர்கள் தமது பாடசாலைக்குரிய சீருடைகளை அணிந்து கொண்டு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்படும் இத்திட்டம் , பின்னர் ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கும் பிரயோகிக்கப்படும்.
கோவிட்19 அச்சுறுத்தல் எதிர்வரும் 2 வருடங்களுக்கு தொடரலாம் என்ற நிலைமைகளின் கீழ், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, தொடராக கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.