பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புக்கள் மற்றும் முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை இரு வாரங்களுக்குள் அறிவிப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் பத்தாயிரத்து நூற்றி அறுபத்தைந்து பாடசாலைகளில் 5100 பாடசாலைகள் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பித்தல் ஜனவரி மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.
முன்பள்ளிகள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை ஆரம்பிக்க முன்னர் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்க முடியுமான திகதியை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.