பாடசாலைகளுக்கு ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை அழைத்தல் தொடர்பாக நிலவிய பிரச்சினைக்கு கல்வி அமைச்சு தீர்வினை அறிவித்துள்ளது.
விசேட கடமைகள் வழங்கப்படாத ஆசிரியர்கள் யாருமே பாடசாலைக்கு அழைக்கப்படக் கூடாது என்பதோடு, அது அவர்களுக்கான விசேட விடுமுறையாகக் கணிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ED/01/09/06/01/05-2021 (sub) இலக்கமிடப்பட்டு 2020.12.02 திகதியிடப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் ஒப்பமிட்டுள்ள கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:
தமிழாக்கம் www.teachmore.lk எம்முடையது. (உத்தியோகபூர்வமானதல்ல)
——-
2020.11.19 ஆம் திகதியிடப்பட்ட ED/01/09/06/01/05-2020 (1) இலக்கம் கொண்ட கடிதத்திற்கு மேலதிகமாகமானது.
மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரசேதங்களின் பாடசாலைகள் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமானது.
அத்தோடு, தேவையான கல்வி மற்றும் கல்வி சாரா ஆளணினரை அழைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டது.
எனினும், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் விசேட கடமைகள் வழங்கப்படாவிடில் அவர்களை பாடசாலைகளுக்கு அழைக்கத் தேவையில்லை என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
பாடசாலைகளுக்கு வராத ஆசிரியர்கள் வீடுகளில் இருந்து கற்பித்தல் நடவடிக்கைளுக்கு தயாராகுதல், தேவையான ஒப்படைகளைத் தயாரித்தல், மற்றும் காணப்படும் வசதிகளின் அடிப்படையில் ஒன்லைன் கற்றலை மேற்கொள்ளல் முதலானவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கேற்ப சேவைக்கு அழைக்கப்படாத கல்விப் பணியணியினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் விசேட விடுமுறை காலமாகக் கணிப்பிட வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகிறேன்.
பேராசிரியர் கபில பெரேரா
கல்வி அமைச்சு