மாணவர்கள் காப்புறுதிக்கு இலங்கையின் உள்நாட்டு காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து சேவை வழங்கலுக்கு கோரப்பட்டதன் அடிப்படையில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனம் மாத்திரம் முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய மாணவர்கள் காப்புறுதியை வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி நிறுவனத்தை பரிந்துரைத்து அனுமதிக்காக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.