நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்னோடி வேலைத்திட்டங்கள் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளில் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
கொட்டாஞ்சேனை பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொண்டு 900,000 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான உலர் பொருட்களை பாடசாலைக்கு வழங்கி வைத்ததுடன் பாடசாலைகளுக்கு உலர் பொருட்களை விநியோகிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக அரசாங்கம் 4 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது, இது ஒரு மாணவருக்கு சுமார் 75 ரூபா என்ற வகையிலாகும். பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் உட்பட ஏனைய பாடசாலை தேவைகளை வழங்க அரசாங்கம் மேலும் 4 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.