வட்டவல பொலிஸ் பிரிவில் உள்ள குயில்வத்த பகுதியில் 17 வயது பாடசாலை மாணவனுக்கு 26ஆம் திகதி கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அம்பகமுவ கோவிட் 19 பிராந்திய ஒருங்கிணைப்பு சிறப்பு பிரிவின் பொது சுகாதார ஆய்வாளர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட குயில்வத்த தமிழ் கல்லூரியின் 12 ஆம் ஆண்டு பயில்வதாகவும் அவர் கடந்த 25 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற போதிலும் அவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் பாடசாலையின் அதிபரும் ஊழியர்களும் பாடசாலையில் நுழைய அனுமதிக்கவில்லை என்று பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இம்மாணவன் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது பாட்டியுடன் தனது தாயும் தந்தையும் வசிக்கும் ஒருகொடவத்தை பகுதிக்கு வந்து பாடசாலை ஆரம்பமாகும் செய்தி அறிந்து 24 ஆம் திகதி கொழும்பில் இருந்து வட்டவல சென்றுள்ளார்.
பின்னர், எழுமாறாக குறித்த மாணவனும் பாட்டியும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த மாணவன் 25 ஆம் திகதி பாடசாலை வளாகத்திற்குள் வருகை தந்திருந்தமையினால் இன்று பாடசாலை கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
.