கோவிட் -19 ஆபத்தில்லாத பகுதிகளில் பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்பள்ளிகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி ஒரு தேசிய திட்டத்தின் கீழ் முன்பள்ளி மற்றும் ஆரம்ப வகுப்புக்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“நாங்கள் முன்பள்ளிகளைத் தொடங்கவும், ஆரம்ப தரங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், முன்பள்ளிக் கல்வி தொடர்பான தேசியக் கொள்கையை இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நாம் தயாராகவுள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தா தெரிவித்தார்.
.