கிளிநொச்சி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என வடக்கு மாகண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 72 வயதை உடைய வயோதிவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டறிய முடியாத காரணத்தால் சுகாதார அதிகாரிகள் மாணவர்களிடையே இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பாடசாலைகளை மூடுமாறு வேண்டிக் கொண்டதை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தொற்றாளர் தொடர்புகள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் பேரில் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அதிகாரிகள் தீர்மானம் மேற்கொள்வர்.
.