மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பல்வேறு தரப்புக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும்,
கல்வி அமைச்சு இந்த தீர்மானத்திலிருந்து பின்வாங்க வில்லை.
உரிய திட்டமிடல்களுடன் சுகாதார வழிகாட்டலுடன் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
.