பாடசாலைகளை ஆரம்பிக்க மேற்காெள்ளப்பட்ட தீர்மானம் உடனடியானது என்றும் போதிய திட்டமிடல்களைக் கொண்டிருக்க வில்லை என்றும் ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இன்று தெரண தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
வியாழன் மாலையில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குழு அமைத்து பாடசாலைகளை தொற்று நீக்கம் செய்து கொள்ள போதிய அவகாசம் இன்றி பாடசாலைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சுகாதார அதிகாரிகள் கிராம சேவகர்கள் தமது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் குழுக்களை அமைத்து பாடசாலைகளைத் தயார் செய்ய போதிக கால அவகாசமில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
முதலாவது கோவிட் இன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்க ஒரு திட்டமிடல் இருந்தது. ஆனால் இந்த முறை அவ்வாறான திட்டமிடல் இல்லை.
மாணவர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றாருக்கு வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும். அதனை கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும்.
ஆரம்ப வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படமாட்டாது. ஆசிரியர்கள் கடமைகளுக்கு வரவேண்டுமா தேவையில்லையா தீர்மானம் இல்லை.
மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களை வருட இறுதியில் சித்தியடையச் செய்வதா இல்லையா? அவர்களுக்கான மாற்றுவழி என்ன?
மேல்மாகாணத்திலிருந்து வெளியே பாடசாலைகளுக்கு செல்வபவர்களின் நிலை என்ன?
என பல்வேறு கேள்விகளை ஆசிரியர் சங்கங்கள் அடுக்கிக் கொண்டு போயின.
பாடசாலைகளின் தரம் 6-11 வகுப்புக்களை ஆரம்பிக்காது,
குறைந்த பட்சம் 23 ஆம் திகதி தரம் 11 -13 வரை ஆரம்பித்து அதில் ஏற்படும் பிரச்சினைகளை அவதானித்து அடுத்த கட்டமாக அடுத்த குழுவினருக்கான வகுப்புக்களை ஆரம்பிக்கும் வகையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க கோரிக்கை விடுத்தார்.
. .