ஊரடங்கு நீக்கப்பட்டாலும் அரச ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையே பணிக்கு வரவழைக்கப்படல் வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றுமு் மாகாண பரிபாலன அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை முதல் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு அரச நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அவசியமான மற்றும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரே வரவழைக்கப்பட வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கடமைக்கு வரவழைக்கப்பட வேண்டிய சேவையாளர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் ஏனையவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றல் முறையில் பணிபுரிய வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.