இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 111 இல் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 தொற்று நிலைமை காரணமாக இந்த இந்த திகதி நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
முன்னதாக, நவம்பர் 6 ஆம் திகதியுடன் விண்ணப்பங்கள் ஏற்பு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.