இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தமது பாடத்திட்டத்தில் இதுவரை முடித்துள்ள அளவு தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கையைக் கோர கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மூலம் இந்த மதிப்பீட்டு அறிக்கை கோரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, க.பொ.த. சாதாரண தரத்தில் ஒவ்வொரு பாடத்திலும் ஏற்கனவே முடிக்கப்பட்ட பாட அளவுகள் மற்றும் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக ஆய்வுக்குட்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஜனவரி 17 முதல் நடத்துவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்து.