கோவிட்19 தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட இசுறுபாய நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் அமைந்துள்ள கல்வி மறுசீரமைப்பு தொலைக்கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து கிருமி நீக்க நடவடிக்கைகளுக்காக இசுறுபாய மூடப்பட்டது. தற்போது முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் திறப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கேற்ப வீட்டிலிருந்து பணியாற்றல் திட்டத்தின் அடிப்படையிலும் நிறுவக தலைவர் அழைக்கும் போது பணிக்கு வருகை தரல் திட்டத்தின் அடிப்படையிலும் கல்வி அமைச்சு இயங்க தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்காணப்பட்ட கோவிட்19 தொற்றாளர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு அவருடன் தொடர்பு கொண்ட 6 பேர் என்போர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
. . .