ஒன்லைன் கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் பலர் இலவச டேட்டாவிற்கான விண்ணப்பம் என்ற போர்வையில் நடாத்தப்படும் மோசடியில் சிக்கியுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் எச்சரித்துள்ளது.
இலவச தரவுகளை வழங்குவதாகக் கூறும் செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் பரப்பப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியுடன் வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், இது 20 பிற சமூக ஊடக பயனர்களுடன் சென்றுவிடும். அத்தோடு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவைப் பெற உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்கும் போது உங்கள் அனைத்து தரவுகளும் திருடப்படுகிறது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பெற்ற புகார்களின் படி, ஒன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்களால் எந்தவொரு தெளிவும் இன்றி இந்த செய்திகளை தங்கள் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் இதனை நம்பிய பல பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் இந்த மோசடியில் வீழ்ந்துள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் என்ற வகையில், இதுபோன்ற போலி செய்திகளின் மூலம், உங்கள் மொபைல் தொலைபேசியில் ஒரு செயலியை நிறுவ முடியும் அதன் மூலம் உங்கள் முக்கிய தரவு மற்றும் சமூக ஊடக கணக்குகள் திருடப்படலாம் என்பதை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதன் காரணமாக, சந்தேகத்திற்கிடமான செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என அவர்களது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
…