அடுத்த வாரத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடாத்துவது தொடர்பாக பரீட்சைகத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு அமுலாகும் பிரதேசங்களில் பரீட்சார்த்திகளோ அல்லது பரீட்சைகக் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளோ தடையின்றி பயணிக்க முடியும் என்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அவர்களைப் பாதிக்காது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிலையத்திற்கு வருவதற்கும் அங்கிருந்து செல்வதற்கும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் இரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்கவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், உரிய நேரத்தில் பரீட்சைக்கு வருவதற்கான பிரயாண ஏற்பாடுகளை மேற்காெள்வது முக்கியம் என்றும் ஊரடங்கு பிரதேச பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு மேலகதி பயணக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.