நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகளை பாதிப்பின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரச சேவை, உள்ஞராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே, ஜே ரத்னசிரி அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியினால் கடந்த 18 ஆம் மற்றும் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலுவலகங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் கைகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு அரச செலவில் முகக்கவசங்களையும் பெற்றுக்கொடுக்குமாறும் அந்த சுற்று நிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கையுறைகளை வழங்குவதற்கும் தொற்று நீக்கிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் சேலை அல்லது ஹொசரி அணியவேண்டியது கட்டாயமல்ல என்பதோடு ஆண்கள் கழுத்துப்பட்டியினை அணிவதும் கட்டடாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.