பல்கலைக்கழக பரீட்சைகளை ஒன்லைனில் நடாத்துவது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல்கலைக்கழக கல்வியியையும் பரீட்சைகளையும் தடங்கலின்றி நடாத்தி முன்கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அதே நேரம் கல்வியின் தரத்தைப் பாதுகாக்கவும் கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.