இசுறுபாயவிற்கு மக்கள் வருவதை விட இசுறுபாய மக்களிடம் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (19) ஆம் திகதி பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றினார்.
மக்கள் தினத்தில் சுமார் 3000 பேர் கல்வி அமைச்சுக்கு வருகை தருகின்றனர். அவர்களில் ஆசிரியர்களை உள்ளடக்கி காத்திருக்க வைத்திருக்க வேண்டாம் என்று நான் அதிகாரிகளைக் கேட்டுள்ளேன். ஆனாலும் நிலமையை சமாளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே இசுறுபாயவிற்கு மக்கள் வருவதை விட இசுறுபாய மக்களிடம் செல்ல வேண்டும் என்று நாம் தீர்மானித்துள்ளோம்.
நாங்கள் முதலாவது அமர்வை ஹம்பாந்தோட்டையில் நடாத்தினோம். நேற்று பதுளையில் நடாத்தினோம். இன்று பொலன்னறுவையில் நடாத்துகிறோம். இந்த திட்டத்தில் அதிக பலன்களைக் கண்டுள்ளோம். பல பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க முடிந்துள்ளது. இந்த திட்டம் இந்த காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதுகிறோம். அடுத்த வரவு செலவுத்திட்டத்தினூடாக கல்வித் துறையின் அதிக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமாக அமையும் என்று நம்புகிறோம்
என்றார்.