நீர்கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் அளவையியல் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வினாப் பத்திரத்தில் வந்துள்ள கேள்வி ஒன்று தொடர்பாக வெளிநபர் ஒருவரிடம் தொலை பேசியில் கலந்துரையாடி விடை கேட்டுள்ளதாகவும், இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பேராதனைப் பல்கலைக்கழக மாணவனொருவரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இந்த மோசடி தொடர்பாக ஏன் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை என்று அவர் இலங்கை பரீட்கைகள் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினார.
இதற்கு பதிலளித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் இவ்விவகாரம் தொடர்பாக பரீட்சைக் திணைக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.