க.பொ.த உயர் தரப் பரீட்சையில் எந்த மாற்றங்களும் செய்யப்படமாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அக்டோபர் 12 ஆம் திகதி தொடங்கிய க.பொ.த. (உயர் தரப்) பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
க.பொ.த. (உயர் தரப்) பரீட்சை நவம்பர் 06 வரை இதே முறையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.