மாளிகாவத்தை பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 28 பேரும் இரண்டு ஆசிரியர்களும் பாடசாலையினுள்ளேயே தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய சட்டதிட்டங்களை மீறி பாடசாலை நடாத்தியமைக்கான மாற்று ஏற்பாடாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
கற்றல் – கற்பித்தல் மற்றும் மக்கள் ஒன்று கூடல் என்பன தடைசெய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
இது அரச பாடசாலை என்றும் தெரியவருகிறது.