கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்கள் மற்றும் உயர்தர பரீட்சை மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது பல்கலைக்கழகங்களை மூடுவது நடைமுறைச் சாத்தியமானது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.