ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்கும் மற்றுமொரு மாணவிக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவியுடன் இருந்த மாணவிக்கே தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பானந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த முதலாவது மாணவிக்கு தொற்று உறுதியானது. அவர் முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கற்றுவந்தார். அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவிக்கே இவ்வாறு தற்போது தொற்று உறுதியாகியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இம்மாணிகள் தங்கிருந்த வீட்டின் பெண் மற்றும் ஆண் இருவரும் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.