உயர் தர விடைத்தாள் திருத்தம் – மேலும் பல சிக்கல்கள்
- நாளொன்றுக்கு 3000 ரூபா முழுமையான அனுமதி கிடைக்கவில்லை.
- 15000 ஆசிரியர்கள் தேவை எனவே மீண்டும் விண்ணப்பம் கோர தீர்மானம்
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் பல பாடங்களுக்கு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாதது பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை கோர திணைக்களம் தயாராகி வருகிறது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்னும் சாதகமான முடிவு எடுக்கவில்லை.
எனவே, இதுவரை ஒரு சில பாடங்களுக்கான கட்டுப்பாட்டு மதிப்பீட்டு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மதிப்பீடுகளை ஆரம்பிக்க, மற்ற பாடங்கள் தொடர்பான கட்டுப்பாட்டு புள்ளித் திட்டம் இந்த வாரத்தில் தயாரித்து முடிக்க வேண்டும் என்று திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கோரிய போதிலும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கைக்கு மாத்திரமே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்து கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறும் அமைச்சரவை அறிவித்திருந்தது. இதன்படி, அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், ஆசிரியர்களுக்கான நாளாந்த கொடுப்பனவான மூவாயிரம் ரூபாவை வழங்குமாறு, திணைக்களம் இன்று நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளது.
மேலும், மதிப்பீடுகளுக்கு சுமார் பதினைந்தாயிரம் ஆசிரியர்கள் தேவைப்பட்டாலும், பதினோராயிரம் பேர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இந்தக் குழுவைப் பயன்படுத்தி மதிப்பீடுகளை நடத்தினால், பாடசாலைகளை மூட வேண்டிய காலம் நீடிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தமிழ் வழி விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேவையான அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் மதிப்பீட்டு பணியை தொடங்கலாம் என மேற்கண்ட வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு சுமார் முந்நூற்று முப்பத்தாயிரம் மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
මෙම පිරිස යොදාගෙන ඇගයීම් පවත්වා ගැනීමට සිදු වුවහොත් පාසල් වසා තැබිය යුතු කාලය දීර්ඝ වනු ඇතැයි විභාග කොමසාරිස් ජනරාල් අමිත් ජයසුන්දර මීට පෙර ප්රකාශ කර තිබිණි.
මේ අතර දෙමළ මාධ්ය උත්තර පත්ර ඇගයීම් සඳහා අවශ්ය සියලු ගුරුවරු අයැදුම් කර තිබේ. එම ඇගයීම් කටයුතු ගැටලුවකින් තොරව ආරම්භ කිරීමට හැකි බවත් ඉහත ආරංචි මාර්ග සඳහන් කළේය.
මෙවර විභාගයට සිසුන් තුන්ලක්ෂ තිස් එක් දහසක් පමණ පෙනී සිටි අතර විභාගය ලබන 17 වැනිදා අවසන් කෙරේ