கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, அதன் மாணவர்களில் ஒருவரின் பெற்றோர் COVID-19 தொற்றியுள்ளதாக சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாடசாலை நிர்வாகம், தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களிடையே வைரஸ் தாக்க அறிகுறி காணப்படாத போதிலும், அவர்களுக்கு பிசிஆர் பரிசோனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.