தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இம்முடிவு அறிக்கப்பட்டது.
மினுவங்காெட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எட்டபப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், கொரோனா கட்டுப்படுத்தும் செயற்குழுவின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா முதலானோர் இசச்ந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.