திவுலப்பிட்டிய பகுதியில் இதுவரை 1300 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்
கொரோனாவின் தற்போதைய நிலைமை குறித்து அவர் இன்று (05) ஊடகங்களுடன் பேசினார்.
கொரோனா நோய்த்தொற்றாளர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.