நாளை (01) கறுப்பு ஆடை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர்களின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது, மார்ச் 01 வேலைநிறுத்தம் நடத்த முன்மொழியப்பட்டதோடு, கறுப்பு ஆடை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாளை பாடசாலைகளில் கறுப்பு ஆடைகளை அணிந்து அல்லது கறுப்பு துணிகளை கட்டிக் கொண்டு அதிபர், ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கொடுப்பனவை வழங்குதல், வங்கி வட்டியை உயர்த்துவதற்கும் வரி விதிப்பதற்கும் எதிராகவும், தேர்தலை ஒத்திவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரதான தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
හෙට (01දා) කළු ඇඳ විරෝධතාවයේ නිරත වීමට ගුරු සංගම් සන්ධානයේ නායකයන්ගේ සාකච්ඡාවේදී තීරණය කළ බව ශ්රී ලංකා ගුරු සංගමයේ සභාපති ජෝසප් ස්ටාලින් මහතා පැවසීය.
එම සාකච්ඡාවේදී මාර්තු 01 වැනි දින වැඩවර්ජනයක් පැවැත්වීමට යෝජනා වී ඇති අතර කළු ඇඳුමින් සැරසී වර්ජනයක් පැවැත්වීමට තීරණය විය.
හෙට දිනයේ විදුහල්පතිවරයා ඇතුළු ගුරුවරුන් පාසල්වල කළු රෙදි ඇඳගෙන හෝ කළු රෙදි බැඳගෙන රාජකාරියේ යෙදෙන බවද ඔහු පැවසීය.
ප්රවාහන දීමනාව නොදීම, බැංකු පොලිය වැඩි කිරීමට සහ බදු අය කිරීමට එරෙහිව, මැතිවරණ කල් දැමීමේ මර්දනයට එරෙහිව මෙම විරෝධතාව පවත්වන බව ඔහු පැවසීය.
දිවයිනේ ප්රධාන වෘත්තීය සමිති එක්ව හෙට වැඩවර්ජනය ක්රියාත්මක කිරීමට නියමිතයි.