இவ்வருடம் இடமாற்றத்தை எதிர்பார்த்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள 25476 பேரில் எவருக்கும் இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரியருகிறது.
வருடாந்த இடமாற்றத்தை எதிர்பார்த்து விண்ணப்பித்தவர்கள் மற்றும் ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக கடமைற்றியவர்கள் முதலானோருக்கு இவ்வருடம் இடமாற்றங்கள் வழங்கப்பட வில்லை. அனுமதிக்கப்பட்ட இடமாற்றங்களும் கொரோனா நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதன்காரணமாக இடமாற்ற விவகாரம் நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளதாக கல்வித் துறை நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இவ்வருடம் தேசிய பாடசாலைகளின் இடமாற்ற விண்ணப்பங்கள் 5,500 கிடைக்கப்பெற்றிருந்ததோடு, அவர்களில் 2476 பேருக்கு இடமாற்றங்கள் அனுமதிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டிருந்தன.
மாகாணப் பாடசாலைகளைச் சேர்ந்த 30,000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்திருந்தோடு, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் ஆரம்பக் கல்வியுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு மாத்திரமே இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா நெருக்கடி காரணமாக இந்த ஏனைய இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே, அடுத்த வருட ஆரம்பத்திலேயே இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.