தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான நேர்காணலின் போது வீட்டி உறுதிக்கு புள்ளிகள் வழங்கும் முறையை ரத்து செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை ஊடக செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசு தகவல் துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.
தரம் ஒன்று மாணவர் அனுமதிக்கான நேர்காணலில் பல பெற்றோர்களால் வசிப்பிடத்திற்கான ஆதாரங்களை சமரப்பிக்க முடியவில்லை. அதற்கு வழங்கப்படும் 20 புள்ளிகளை அவர்கள் இழந்து விடுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
ஒரு பத்திரம் இல்லாமல், இந்த 20 மதிப்பெண்களைப் பெறாததால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்க்க முடியாது போகிறது. 30 அல்லது 40 ஆண்டுகளாக பிரதான பள்ளிகளுக்கு முன்னால் வாழ்ந்த போதிலும், பத்திரம் இல்லாததால் அவர்களின் குழந்தைகள் பாடசாலைக்குள் நுழைய முடியவில்லை என்று அமைச்சர் கூறினார். நிலைமையை மாற்றி புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதாக நம்புவதாக அவர் கூறினார்.
அதன்படி, தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், கிராம சேவகர் மற்றும் பிற அதிகாரிகள் அதை சான்றளித்து, அவர்கள் வசிக்கும் இடத்தை சான்றளித்தால், அது போதுமானதாக இருக்கும் என்று அமைச்சரவை ஆராய்ந்ததாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.