அரசாங்கத்தின் முன்னுரிமை கல்விக்கே என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கல்விச் செயற்பாடுகளை முழுமையாக மறுசீரமைப்பதற்கான செயற்றிட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான பணி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் குழந்தை விருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதி மற்றுமு் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் எதிர்காலத்திட்டம் தொடர்பாக இன்று பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன் படி,
முன் பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விக்கு விசேட கவனம்
அனைத்து பாடசாலைகளுக்கும் அதிகாரிகளின் சமமான தனிப்பட்ட கவனம்
அனைத்துப்பாடசாலைகளிலும் உட்கட்டமைப்பு விருத்தி
கட்டணம் அறவிடாத முன்பள்ளி ஆசிரியர்களு்கு கொடுப்பனவு
மாற்றுத் திறனுள்ள பிள்ளைகளுக்கான விசேட திட்டம்
பெண்கள் தொடர்பான தேசிய குழு பாராளுமன்றிற்கு
என்பன விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.