இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 38 000 க்கும் அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன் படி இம்முறை 8000 மேலதிக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக உப வேந்தர்களுடன் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
இதனடிப்படையில், இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 38 ஆயிரத்திற்கும் அதிக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.
இதே நேரம், 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம், வெட்டுப்புள்ளிகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை மருத்துவ பீடத்திற்கு மாத்திரம் 369 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.