பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தினமும் ஒரு முட்டை வழங்குவது குறித்து ஆராயுமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். . நேற்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
இதன்போதே, மாணவர்களுக்கு தினமும் ஒரு முட்டை வழங்குவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளது.
ஏற்கனவே, பால், அரிசிக் கஞ்சி, சத்துணவு உட்பட பல திட்டங்கள் சில பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இப்போது முட்டை வழங்கும் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.